ஆசியாவில் சோகமான சாதனையை நிலைநாட்டிய இலங்கை
ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது, அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment