Header Ads



நண்பர் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு, கடலுக்குச்சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி


நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (13) பிற்பகல் நீராடச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில் மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அதே வயதுடைய மேலும் இரு மாணவர்களுடன் உயிரிழந்த மாணவர் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், மூவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.


மேலும் இரு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், மூவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளதுடன் இரு மாணவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த மூன்று மாணவர்களும் புத்தாண்டு விடுமுறை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாக வீடுகளுக்குத் தெரிவித்துவிட்டு கடலில் குளிக்கச் சென்று கொண்டிருந்த போதே திடீர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.