Header Ads



விதைகளை தூக்கி எறிந்து விடாதீர்கள் - காலமெல்லாம் நமக்கும் ஒரு பங்கு வந்து சேரும்...


பழங்களை சாப்பிட்டதும் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள், அவைகளை உலர்த்தி, ஒரு பையில் போட்டு, உங்கள் வாகனத்தில் சேமித்து வையுங்கள். 


பயணங்கள் செல்லும் போது மரங்களற்ற சாலையோரங்களில் அந்த விதைகளை எறிந்துவிடுங்கள். 


பூமி அவைகளை தத்தெடுத்து வளர்க்கக்கூடும், வானம் நீரூற்றி கவனிக்கக்கூடும். அவைகளின் ஏக்கமும் அதுதான். 


இந்த நற்சிந்தனை தாய்லாந்து, மலேசியா, மற்றும் சிங்கப்பூர் போன்ற சில ஆசிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர்  செயற்படுத்தப்பட்டது. இப்போது அங்கே பல இடங்களிலும் பழம் தரும் மரங்கள் அதிகரித்துவிட்டன. 


குப்பையில் போடும் விதைகளை சாலையோரங்களிலும், காலி நிலங்களிலும் நாம் தூவிவிடும் போது, நம் பூமிதான் செழித்தோங்கும், அதன் மூலம் பயன் பெறுவோர் பயன்பெறும் காலமெல்லாம் நமக்கும் ஒரு பங்கு வந்து சேரும்.


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.