பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பு
வழக்கறிஞர்கள் தமது வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் போது, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் செயற்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதிய வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க உயர் நீதிமன்றத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் உயர் நீதிமன்றத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமது வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் போது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.
கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை 2 வாரங்களுக்குள் பணிப்பாளர், பொலிஸ் சட்டப் பிரிவு, இல. 234, வொக்ஸோல் வீதி, கொழும்பு 02 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பிரிவின் தொலைநகல் - 011 2322685 அல்லது மின்னஞ்சல் - legaldivision4@gmail.com என்ற முகவரியூடாக அனுப்பலாம்.
Post a Comment