Header Ads



அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கையர் பற்றி வெளியான தகவல்


அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கை பின்னணியைக் கொண்ட தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.


59 வயதுடைய தந்தையும், 21 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


அவர்கள் இருவரும் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


அங்கு நீராடச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரை காப்பாற்ற மகள் மற்றும் மகன் முயற்சித்ததாகவும், மூவரும் நீரில் மூழ்கியததாகவும் கூறப்படுகிறது.


எனினும், இதன்போது மகள் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.