Header Ads



ராஜித்தவை விரட்டிவிட தீர்மானமா..?


அரசில் இணைவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக, குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.


“இப்போது ராஜிதவை ஐக்கிய மக்கள் சக்தியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.


கட்சிக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்த சில மணி நேரங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்னவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக,ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் S. M. மரிக்கார் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


No comments

Powered by Blogger.