பதவி நீக்கப்படுவாரா சுசில்..?
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி வருகின்றது.
கடந்த வாரம் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் கல்வி அமைச்சர் என்ற வகையில் சுசில் பிரேமஜயந்த கலந்து கொள்ளவில்லை.
உயர்தர விடைத்தாள் பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்தும் அதிபர் இதன்போது கடுமையான கருத்தை வெளியிட்டார். விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்தும் பிற்போடப்பட்டால் கல்வி அத்தியாவசியமான சேவைக்குள் உள்வாங்கப்படும் என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சருக்கும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவருக்கும் இடையில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மேலதிக செயலாளரை அமைச்சர் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதோடு சட்டத்திற்கு அமைவாக தான் கடமையாற்றுவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
Post a Comment