Header Ads



காலிமுகத்திடலுக்கு நோன்பு திறக்கச் செல்வதாக கூறிய பெண்களை, கலிமா ஓதச்சொன்ன பொலிஸார், பதிலுக்கு அதான் சொன்ன பெண்கள்


காலிமுகத்திடலில் இன்று மாலை(09.04.2023) இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பெண்களை போராட்டக்காரர்கள் என எண்ணி பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.


இதன்போது குறித்த பெண்கள் தாங்கள் முஸ்லிம் பெண்கள் என்றும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இங்கு வருகை தந்தோம். நாங்கள் ஏன் உள்ளே செல்லக்கூடாது என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்போது பொலிஸார் நீங்கள் உண்மையில் முஸ்லிம் பெண்கள் எனில் கலிமா ஓதி காட்டுமாறு கேட்டுள்ளனர்.


இதற்கு குறித்த பெண்களும் அதான்  ஓதி காட்டியுள்ளார்கள்.


இருப்பினும் இந்த பெண்களை உட்செல்ல அனுமதிக்காமையினால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. Tamilw

No comments

Powered by Blogger.