Header Ads



தலாய்லாமாவின் செயலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனம்


”சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம்” என பிரபல  பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.


திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த வீடியோவில், தன் காலில் விழுந்த சிறுவன் ஒருவனின்  உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுக்கிறார். மேலும், தன் நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது, அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


தலாய்லாமாவின் இச் செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் கிளம்பியுள்ளது.


இந்நிலையில் இது குறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், " சிறுவனுக்கு தலாய்லாமா செய்தது பாலியல் துஷ்பிரயோகம். மதம் சார்ந்த ஆண்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் வேட்டையாடுகிறார்கள். அதில் தலாய்லாமாவும் ஒருவர் என்று நினைக்கும் போது ஏமாற்றமடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.