Header Ads



சவூதி அரேபியாவின் ஒத்துழைப்புகளை பெறுவதற்கு திட்டம்


கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.


கடற்றொழில் அமைச்சுக்கு நேற்று (27) வருகை தந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்


இடையிலான கலந்துரையாடலின் போதே, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.


கடற்றொழில், நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடு முழுவதும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய பல்வேறு திட்ட முன் வரைபுகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை சவூதி அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. எந்த உலகில் இந்த அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்பது புரியவில்லை. இலங்கையில் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்ய முன்பு எவ்வாறு சவூதி அரேபியா அரசாங்கத்தின் உதவியைப் பெறலாம் என்பதை முதலில் வௌிநாட்டு அமைச்சர் அலி சப்ரியிடம் கேளுங்கள். சுடச் சுட தௌிவாகச் சொல்லுவார். ஒரு வாரத்துக்கு மேல் சவூதியின் உதவியை நாடி சவூதி அரேபியாவில் தங்கியிருந்த வௌிநாட்டு அமைச்சருக்கு ஒரு கபினட் அமைச்சரையாவது சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏன் என்றால் சுருக்கமாக கோவிட் தொற்றால் மரணமான முஸ்லிம்களின் மையத்தை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருந்த போதிலும் இனத்துவேசி கோதாவின் கையாட்களான மருத்துவர்களும் படையினரும் சேர்ந்து பலாத்காரமான முஸ்லிம்களின் மையத்தை எரிந்த அநியாயத்தை நீங்களும் அமைச்சர் என்ற வகையில் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இந்த வகை மனிதர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக இல்லை என தௌிவாக சவூதி அரசாங்கம் கூறிவிட்டது. அந்த அரசாங்கத்திடம் மீண்டும் கையேந்த தயாராகும் இந்த மந்திகள் கூட்டம் இலங்கையை மென்மேலும் அவமானப்படுத்தி கேவலப்படுத்தும் வேலையைத் தான் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.