கட்டுநாயக்காவுக்கு வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று -28- பிற்பகல் 04.00 மணி முதல் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.
இன்று பிற்பகல் 04.10 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த Fitz Air விமானம் 8D 834 மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 143 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாகவும், அவர்களை ஏற்றி வந்த விமானம் இன்று மாலை 05.00 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் காலநிலை சீரடைந்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டவுடன் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி விடப்படும் என மத்தள விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Post a Comment