பாணந்துறையிலும் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு
பாணந்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள 23 முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (செயல்திறன் உதவி பொலிஸ் அத்தியட்சகர்) இதனை தெரிவித்தார்.
அக்குறணையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களை குறிவைத்து குண்டுதாக்குதல் நடத்தப்படும் என அநாமதேய இரகசிய தகவலையடுத்து, அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாணந்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 14 முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் மூன்று முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் நடமாடும் சேவை வாகனங்கள் மூலம் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment