இலங்கையில் முதன்முறையாக உருவாகும் தொழிற்சாலை
பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கஹட்டவெல பண்ணை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
இத்தொழிற்சாலையை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் பார்வையிட்டார். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தாலும் மின்சாரம் இல்லாததால் உற்பத்தியை தொடங்க முடியவில்லை.
உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இலங்கைக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 21 பில்லியன் ரூபாவாகும்.
தற்போது இலங்கையில் உருளைக்கிழங்கு சிப்ஸின் தேவை 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. மாலத்தீவு, கனடா, ஐக்கிய இராச்சியம், லக்சம்பேர்க் மற்றும் தென் கொரியாவில் இருந்தும் இலங்கையில் இருந்து உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு பெரும் தேவை உள்ளது.
தற்போது வெலிமடை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய இடங்களில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பிரதான மூலப்பொருளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வசதியினால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையை பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருளைக்கிழங்கு பயிரிடும் 180 விவசாய குடும்பங்கள் தமது அறுவடைகளை இத்தொழிற்சாலையில் விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment