புத்தளத்திற்கு சென்ற டொல்பின் (படங்கள்)
புத்தளம் களபுப் பகுதியில் டொல்பின் ஒன்று இன்று -09- உயிருடன் கரையொதிங்கியது.
இதன்போது குறித்த பகுதி மீனவர்கள் டொல்பின் ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இலந்தையடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று குறித்த டொல்பினை மீனவர்களின் இயந்திரப் படகின் உதவியுடன் ஆழமான பகுதிக்குக் கொண்டுச் சென்று விடுவித்தனர்.
குறித்த டொல்பின் போத்தல் மூக்கு டொல்பின் (Bottlenose dolphins) இனத்தைச் சார்ந்தது எனவும் குறித்த டொல்பின் சுமார் 7 அடி நீளமுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி
Post a Comment