Header Ads



இந்திய அளவில் முக்கிய இடம்பிடித்தார் இஃப்ரா கான்


Nasrath S Rosy


JEE தேர்வுகளில் முதலிடம் பிடித்த இஃப்ரா கான்.


நாக்பூரைச் சேர்ந்த இஃப்ரா கான் தேசிய அளவில் நடத்தப்பட்ட JEE தேர்வுகளில் 99.9946424 மதிப்பெண் பெற்று முதல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.


ஐஐடியில் இணைந்து கணிணி தொழில்நுட்பம் படிக்க வேண்டும் என்பதே இவரது சிறுவயது கனவு. அதனை நிறைவேற்றித்தர அவரது இரு அண்ணன்களும் பெரிதும் உதவியுள்ளனர். 


அவர்களும் ஐஐடி மாணவர்கள் தான். ஆறாம் வகுப்பு முதலே தாம் கணிணி தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களை படித்து வந்த காரணத்தால் தன்னால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக கூறுகிறார் இஃப்ரா. 


இந்தியன் ஒலிம்பியாட் பள்ளி எனுமொரு சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சுஹைல் கான் மற்றும் நக்மா கானின் மகளான இஃப்ரா படிப்பில் ரொம்ப சுட்டி என அறியப்படுகிறார்.


No comments

Powered by Blogger.