8.9 பில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ள ஜோன்சன்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன்சன் அன்ட் ஜோன்சன் மருந்தாக்க நிறுவனம் அஸ்பெஸ்டஸ் என்னும் தாதுப்பொருள் கொண்ட அதன் பவுடர் பொருட்களால் புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடுத்தவர்களுக்கு 8.9 பில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நடந்துவரும் அந்த வழக்குகளுக்குத் தீர்வு காண அந்தத் தொகையை நிறுவனம் முன்மொழிந்துள்ளது. அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அஸ்பெஸ்டஸ் தாதுப்பொருள் கலக்கப்பட்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் டால்க் பவுடரைப் பயன்படுத்தியவர்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறும் பல்லாயிரம் வழக்குகளை நிறுவனம் எதிர்நோக்கியது. ஆனால் அவற்றுக்குப் போதிய அறிவியல் ஆதாரம் இல்லை என்று நிறுவன வழக்காடலின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் குறிப்பிட்டார். நிறுவனம் எந்தத் தவறையும் ஒப்புக்கொள்ளவில்லை.
எனினும் குழந்தைகளுக்கான டால்க் பவுடரின் விற்பனையை அது 2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவிலும் கனடாவிலும் நிறுத்தியது.
Post a Comment