வெள்ளை 880, சிவப்பு 920 ரூபா - அதிவிசேட வர்த்தமானி வெளியானது
இன்று முதல் (20) அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு நிற முட்டை 920 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், வெள்ளை நிற முட்டை ஒன்று 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 46 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உலகில் அவமானப்பட்ட அற்ப விடயங்களைச் சரியாக நிர்வாகிக்கத் தெரியாத மடத்தனமாக தீர்மானங்களை எடுக்கும் நிலைமைக்கு நாளுக்குநாள் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பது வெட்கக் கேடான ஒரு போக்காகவே நோக்க வேண்டியிருக்கின்றது. முட்டையை 44, 45 ரூபாவுக்கு விற்பதை நிர்வகித்தத் தெரியாமல் தற்போது கிலோவுக்கு விலையை வர்த்தமானியில் பிரசுரித்தால் கிலோ தேவையில்லாது ஓரிண்டு முட்டைகள் வாங்க வரும் பாவனையாளர்களை மீண்டும் சுரண்ட புதிய வழியைத்தான் அரசாங்கம் காட்டிக் கொடுக்கின்றது. இதனைப் பார்த்து சிந்தித்து மக்களின் தேவைகளை உணரக்கூடிய கொஞ்சமாவது தலையுள்ள நபர்கள் அரசாங்கத்துறையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. நாம் யாரிடம் போய் முறையிடுவது.
ReplyDelete