800 மில்லியன் அமெரிக்க டொலர் - மீண்டும் ஜப்பானிடம் செல்வதற்கு திட்டம்
இதனை இலகு கடன் அடிப்படையில் வழங்க ஜப்பான் முன்வந்தது. எனினும் கோட்டாபய நிராகரித்ததால் அதனை பங்களாதேஸ் உள்ளீர்த்தது
இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கிடைத்த பின்னர் செயற்றிட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த தெரிவித்தார்.
ஜப்பான் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கொழும்பு கோட்டை முதல் மாலபே வரை தூண்களின் ஊடாக பயணிக்கும் இலகுரக ரயில் செயற்றிட்டத்தில் மூன்று உப மார்க்கங்களையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
கொழும்பு வீதிகளில் காணப்படும் நெரிசலை குறைத்தல் உள்ளிட்ட பலன்களை இந்த திட்டத்தின் ஊடாக அடைய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
16 கிலோமீற்றர் தூரத்தில் 16 தரிப்பிடங்களுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இலகுரக ரயில் செயற்றிட்டத்தின் ஊடாக கொழும்பு கோட்டையில் இருந்து மாலபேயை 30 நிமிடங்களில் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment