Header Ads



8 ஆட்டோக்கள், கார் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ட்ரக் - 4 பேர் படுகாயம்


பஸ்யால - மீரிகம வீதியின் கலேலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் பயணித்த பூம் ட்ரக் (boom truck) ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 8 முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பூம் ட்ரக்கின் தடுப்பான் செயலிழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.