பிக்குவை பாலியல் பலாத்காரம் செய்த 7 பெண்கள் - இலங்கையில் பேரதிர்ச்சி
குருநாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் ஏழு பெண்கள், பௌத்த பிக்கு ஒருவர் தங்கியிருந்த விகாரைக்குள் புகுந்து, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 22 வயதான பௌத்த பிக்குவை 7 பெண்கள் இணைந்து மோசமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த பிக்கு விகாரைக்குள் இருக்கும் போது பெண்ணொருவர் அவரை அழைத்துள்ளார்.
தன்னை அழைப்பது யார் என பார்க்க வெளியில் சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபர்களான பெண்கள், குறித்த பிக்குவை விகாரையில் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து காவி உடையை கழற்றுமாறு கடும் அழுத்தங்களை கொடுத்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவத்தை எதிர்நோக்கிய இளம் பிக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் காரணமாக பிக்கு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
oruvan
Post a Comment