ஆட்டோ சாரதியினால் 6 வயது சிறுமி துஷ்பிரயோகம்
தந்தையில்லாத சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் வவுனியா காளிகுளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதியின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கைக் கண்ட வைத்தியர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி விசாரணையை ஆரம்பித்த பொலிஸாருக்கு அந்த வீட்டில் இருந்த இளைஞரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment