Header Ads



பொதுஜன பெரமுனவின் முக்கிய 5 பேர், SJB க்கு தாவுகிறார்கள் - ஹிரு செய்தி வெளியீடு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்களிப்பு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து ஐந்து முக்கிய உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.


தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விடயத்தில் இறுதியை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத அவர், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மீட்சிக் கொள்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிரு செய்தி 

1 comment:

  1. இவர்கள் "அரசியல் கோட்பாடுகள்" அல்லது "வாக்காளர்களின் நலன்கள்" தங்கள் மனதில் இல்லை" அல்லது "தேசத்தின் அவலநிலை", ஆனால் மிகவும் சுயநலம் மற்றும் தங்கள் சொந்த செழிப்பு மற்றும் வளர்ச்சியில் ஆர்வமுள்ள கபட அரசியல்வாதிகள் (ஹூக்-அல்லது- by-crook) கூட முழு ஊழல் மற்றும் அரசு நிதி மோசடியில் ஈடுபடுவார்கள்.
    அரசியலில் தொடர்ந்து தங்குவதற்கு அவர்கள் திட்டமிட்டு கட்சி மாறினாலும், சாதாரண மக்கள் SLPP க்கு வழங்கிய ஆதரவு குறையப்போவதில்லை. இலங்கையில் எந்தத் தேர்தலிலும் இறுதியாக SLPP தான் வெற்றி பெறும். மேற்குலகம் மற்றும் அமெரிக்காவின் சதிதான் இப்போது நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நம் தேசத்தை தள்ளியது என்பதை அவர்களின் "மாத்ருபூமியை" நேசிக்கும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் அரசியல் அதிகாரங்களுடன் இணைந்து பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள வணிகக் குழுக்களின் ஆதரவுடன், மேற்கத்திய சதிகாரர்களின் துணையுடன் கடந்த அரசாங்கத்தை கவிழ்த்ததையும் மக்கள் அறிவர்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.