4 மாதங்களில் வலுப்பெற்ற இலங்கை ரூபா
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பிரச்சினையால், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தற்போது, வலுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 92 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 75 சதமாகவும் பதிவாகி இருந்தது.
Post a Comment