ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம்கள் அல்லாத 4 பேர்
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (21.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் ஐ.நாவில் அசாத் மௌலானா என்ற நபர் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்களும் தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ள சிவனேசத்துரை சந்திரகாந்தனும் தொடர்பில் இருந்ததாக அவரது முன்னாள் பேச்சாளர் ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Post a Comment