Header Ads



48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை அறிவிப்பு


ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடக்கிறது.


இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.


இந்த நிலையில், சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சூடானில் தற்போதைய நிலை மோசமாக இருப்பதாகவும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.