Header Ads



உள்ளூராட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,714 ஆக குறைப்பு - பிரதமரிடம் அறிக்கையை கையளித்தார்


புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையின்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,714 ஆகும். 


புதிய எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று (11) கையளிக்கப்பட்டது. 


இன்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பான குழு அறிக்கையை பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.