அறுவடை 40 வீதத்தால் குறைந்தது, 3.3 மில்லியன் மெட்ரிக்தொன் அறுவடை என பொய் கூறும் அமைச்சர்
விவசாய அமைச்சர் இம்முறை நெற்செய்கை தொடர்பில் பொய் கூறுவதாகவும், பொய்யான அறிக்கைகளை வழங்கி ஜனாதிபதி தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த வருட அறுவடை 40 வீதத்தால் குறைந்துள்ளது.
3.3 மில்லியன் மெட்ரிக் தொன் அறுவடை என அமைச்சர் மஹிந்த அமரவீர பொய் கூறுகிறார். இந்த எண்ணிக்கை எங்கிருந்து கிடைத்தது? அறுவடை காலம் முடிந்து ஒரு வாரமே ஆகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment