3 வருடங்களுக்கு பின்னர் யானையின் மே தினம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
மூன்று வருடங்களின் பின்னர் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளதாகவும், எனவே இந்த நிகழ்விற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படவுள்ளதாக பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடியால் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மூன்று வருடங்களாக மே தினக் கூட்டங்களை நடத்தவில்லை.
Post a Comment