ரவூப் ஹக்கீமின் ஜீப் மோதி காயமடைந்தவர் 3 மாதங்களின் பின்னர் உயிரிழப்பு
(தினக்குரல் பத்திரிகை)
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பயணித்த டிஃபென்டர் ஜீப் வண்டியுடன் மோதியதில் காயமடைந்த நபர் மூன்று மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பதுளை – செங்கலடி வீதியில் கெகிரிஹேன பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த தற்காலிக தேநீர் கடையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் இருந்த டி.எம்.சந்திரபால என்ற 58 வயதுடைய நபரும் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் சார்ஜன்டாக கடமையாற்றிய சுசந்த என்ற உத்தியோகத்தரும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சந்திரபால மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். ஆனால், விபத்தினால் ஏற்பட்ட காயங்களினால் உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளான சந்திரபால, அண்மையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment