3 பேருக்குமான வாக்குகள் அழிக்கப்பட்டன: மஹிந்த
பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை விசேட அறிவிப்புக்களை விடுக்கும்போதே போது இந்த அறிவிப்பை விடுத்த அவர் மேலும் கூறுகையில், .
2022.07.20 ஆம் திகதி பராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்புக்கான அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் மற்றும் 2023.03.24 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தெரிவு குழுவின் அனுமதிக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டது என்றார்.
இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஆளும் தரப்பின் வேட்பாளரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்,எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும்,தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குச்சீட்டுக்கள் இடைக்கால ஜனாதிபதி தெரிவு சட்டத்தின் சிறப்பு சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டன
Post a Comment