உலகில் 36,000 மில்லியன் தாதியருக்கான கேள்வி, இலங்கையிலிருந்து அனுப்ப நடவடிக்கை - கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாம்
உலகளாவிய ரீதியில் சுமார் 36,000 மில்லியன் தாதியருக்கான கேள்வி காணப்படுகிறது. இலங்கையிலிருந்து அதற்கென பயிற்சி பெற்ற பெருமளவு தாதியரை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டு வருவதாக தொழில், மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு செல்வோர் தொடர்பில் முழு பொறுப்பையும் பணியகம் ஏற்கமென்றும் ஆட்கடத்தல் காரர்களிடம் சிக்கிவிடக் கூடாதென்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
சட்டவிரோதமான முறையில் செயற்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment