30 ஆயிரம் மில்லியன்களை நாசம் செய்தாரா கோட்டாபய..?
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் அரசியல் வாதிகளின் வீடுகளை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதிகள் 5 ஆண்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே...
இந்த வீதி அமைப்பு ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை அரசியல் வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமான விடயம் என்ன வென்றால், தனியார் வீதிகளும் கூட அரச செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன என்பது தான். இதனால் திறைசேரிக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை சுமார் 30 ஆயிரம் மில்லியன் ரூபா இந்தத் திட்டத்தால் இழப்பு ஏற்பட்டுள்ளது என நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றும் குறித்த மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.
ஆனால் இந்த இழப்பையும் திறைசேரிக்கு ஏற்பட்ட நட்டத்தையும் பொறுப்பேற்க அரசாங்கத்தில் யாரும் கிடையாது. அதுதான் இலங்கை அரசியல்.
ReplyDelete