Header Ads



மில்லியன் கணக்கான முட்டைகளின் இறக்குமதிக்கு அனுமதி


மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


அதன்படி, தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 30 மில்லியன் முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றார்.


எவ்வாறாயினும், அதிக அளவு இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.


இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


அதன்படி, முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இதுவரை மொத்தம் 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

1 comment:

  1. ​வௌிநாட்டிலிருந்து முட்டை இறக்குமதி செய்து நாட்டில் விநியோகம் செய்ய இலங்கைக்கு ஒரு விவசாய அமைச்சர் தேவையில்லை. பொருட்களை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் வேலையை தனியார் கம்பனிகள் மிகவும் சிறப்பாக செய்கின்றன. அதன் மூலம் கோடான கோடி பணம் சம்பாதிப்பதுடன் பொது மக்களுக்கு உரிய பொருட்கள் நியாயமான முறையில கிடைக்கின்றன. எனவே இறக்குமதி செய்து முட்டை விநியோகம் செய்யும் இந்த விவசாய மந்தி(ரி) யை உடனடியாக பதவிவிலகி பொதுமக்களின் பணத்தில் சுகபோகம் அனுபவிக்கும் இந்த மந்தி(ரி) பொதுமக்கள் காட்டுக்கு விரட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.