தெற்காசியாவின் மிக உயரமான கோபுரத்திலிருந்து கீழே குதித்த 2 பேர் (வீடியோ)
இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 2 ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வருகை தந்து கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
இந்த செயற்திட்டம் சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் எனவும், அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இலங்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment