ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்கள் 2 பேர் பிணையில் விடுதலை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு–கோட்டை நீதவான் திலின கமகே (26.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 வரையான காலப்பகுதியில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிணையில் விடுக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீட் மொஹமட் ரிபாய் மற்றும் மொஹமட் மர்சுக் ரிலா ஆகியோருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment