Header Ads



பாகிஸ்தானுக்கு 2 யானைகளை அன்பளிப்பா..? இலங்கையின் நிலைப்பாடு இதுதான்


பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது.


கராச்சி மற்றும் லாகூர் விலங்கியல் பூங்காக்களுக்கு இந்த இரண்டு யானைகளும் அனுப்பப்படவுள்ளதாக, பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


பாகிஸ்தானின் விலங்கியல் பூங்காவில் 17 வயதான ஆபிரிக்க யானையான நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்தே, இலங்கை இரண்டு யானைகளை பரிசாக வழங்குவது குறித்த செய்திகள் வெளியாகின.


எனினும், ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரித்துள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.