அதிக வெப்பத்தால் 2 பேர் மரணம் - களைப்புக்காக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஒருவர் இறப்பு
எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்.
மற்றவர் தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்தார் என எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அதுல தம்மிக்க (34) மற்றும் எல்.ஜி. விஜேசிங்க (38) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு மரணங்கள் தொடர்பாகவும், எப்பாவெல அரசு மருத்துவமனை டாக்டர் என்.எச். திஸாநாயக்கவின் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
Post a Comment