அமெரிக்காவின் சில பகுதிகளை துவம்சம் செய்த சூறாவளி - 26 பேர் மரணம்
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் பல சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியால் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடுகள் அழிந்தும் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டும் பல மாநிலங்களில் இந்த சூறாவளி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 60க்கும் அதிகமான டொர்னாடோ சுழற் காற்று பதிவாகி இருக்கதாக வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதில் அர்கான்சாஸ், டென்னசி, இல்லினொய்ஸ், இன்டியானா, அலபாமா மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான ஒரு சூறாவளி அர்கான்சஸ் மாநிலத்தின் சிறு நகரான வெயினை துவம்சம் செய்துள்ளது.
இந்த சூறாவளி தொடர்ந்து கிழக்கை நோக்கி நகர்ந்திருக்கும் நிலையில் சிகாகோ, டெனஸ்ஸி, இண்டியானாபொலிஸ் ஆகிய நகரங்களையும் சூறாவளி கடந்து செல்லக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மிசிசிப்பி மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் சூறாவளி தாக்கியுள்ளது.
Post a Comment