Header Ads



ரமழான் இரவு 21 அன்று, அஷ்ஷைக் ஸுதைஸ் கூறிய 6 அறிவுரைகள்


மக்கா ஹரமில்தொழுபவர்கள் முஃதமரீன்கள் (உம்ரா செய்பவர்கள்) மத்தியில் தலைமை இமாம் அஷ்ஷைக் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுதைஸ் 11-04-2023 ஆற்றிய உரையிலிருந்து


🔴 இந்த பத்து நாட்களிலும், புகைப்படம் எடுத்தல், அலைபேசிகளில் அரட்டை அடித்தல், புறம்பேசுதல் கோள்மூட்டுதல், வதந்திகள் பரப்புதல் போன்றவற்றில் மூழ்கிவிடாமல், வழிபாட்டுக்கு நேரத்தைச் செலவிட வேண்டும்.


🔴 இந்த நாட்களில் ஒரு சிறந்த இரவு உள்ளது, அது லைலத்துல்-கத்ர் இரவு,  அல்லாஹ் அதைப் புகழ்ந்துள்ளான்,  அதில் அமல் செய்வது ஆயிரம் மாதங்களில் செய்வதை விட சிறந்தது, வானவர்களும் ரூஹும் (ஜிப்ரயீல்)  நன்மை, பரக்கத்துகளுடன் இறங்கி வருகின்றனர்.


🔴  லைத்துல்கத்ர் இரவில், ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அதன் முழுப்பலன்களையும் பெற ஆசைப்படுவோம்.


🔴 ரமழானின் கடைசிப் பத்து நாட்கள் அவைகளுக்கு  தனிச்சிறப்பு இருக்கிறது, நாம் அனைவரும் நற்செயல்களின் மூலம் அதன் பயன்களைப் பெற முயலவேண்டும்.


🔴  பெண்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழவேண்டும், தங்களின் ஹிஜாபுகளையும் கண்ணியத்தையும், காப்பாற்ற வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கு ஹரமுடைய கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது போன்ற மகத்தான இரவில் தொழுபவர்களின் கவனத்தை திசை திருப்பும் எந்த காரியத்தையும் செய்யாமல் குழந்தைகளை கண்காணிக்கவேண்டும்


🔴 இங்கு திரண்டிருக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு வசதியாக தஹஜ்ஜத் தொழுகை இரண்டு ஹரம்களிலும் சரியாக 12:30 மணிக்கு நடைபெறும்.


Muhammed Ismail Najee Manbayee


No comments

Powered by Blogger.