Header Ads



இந்தியாவில் பெருநாளன்று கொடுக்கப்பட்ட தர்மம் மட்டுமே 2,000 கோடிகள்


- Abbasali Abbas Abbas - 


இந்த வருடம் 2023 ரமலான் நோன்பு (ஈகை) பெருநாளன்று இந்தியாவில் மட்டும் முஸ்லீம்களால் கண்ணுக்கு தெரிந்து கொடுக்கப்பட்ட கட்டாய தர்மம் மட்டுமே  இரண்டாயிரம் கோடிகள்.


உலகில் உள்ள ஒவ்வொரு எல்லா முஸ்லீம்களும் அன்று பிறந்த குழந்தை உள்பட  பித்ரா என்று சொல்லப்படும் பெருநாள் அன்று  பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பு கொடுக்க வேண்டிய கட்டாய பெருநாள் தர்மமாகும்.


குடும்பத்தில்  ஒரு நபருக்கு... 120 ரூபாய் என்கிற கணக்கில்  அன்று பிறந்த குழந்தைக்கும் கணக்கிட்டு பித்ரா என்ற  பெருநாள் தர்மம் செய்வார்கள். 


தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட  70 லட்சம் முஸ்லீம்கள் இந்த பித்ரா தர்மத்தை கொடுத்துள்ளார்கள்.


குறைந்தது  50 லட்சம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் பெருநாள் அன்று தொழுகைக்கு முன்பாக மட்டுமே 65 கோடிகளை தர்மமாக  பணமாகவோ,  பொருளாகவோ முஸ்லீம்கள் கொடுத்துள்ளார்கள்.


இந்தியாவில் மட்டுமே  கிட்டதட்ட 2000 இரண்டாயிரம் கோடிகளை தர்மமாக முஸ்லீம்கள் கொடுத்துள்ளார்கள்.


இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்  30 நாட்கள் விரதம் இருந்து  பெருநாள் அன்று புத்தாடைகள் உடுத்தி கூட்டம் கூட்டமாகத் தொழுகைக்கு வரும் ஒவ்வொரு முஸ்லீம்களின்  பெருநாள் தொழுகையும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட, வேண்டுமானால் இந்த பித்ரா தர்மம் ஒரு கட்டாயக் கடமையாகும்.


இந்த பித்ரா தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்பாக கொடுக்க வில்லையென்றால்,  பெருநாள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.


இது இறை சட்டம். 


இந்த இறை சட்டத்தை பின்பற்றாத எந்த முஸ்லீமும் இந்த பூமியில் இருக்க மாட்டான்.


இது தெரிந்து கொடுக்கும் தர்மம் மட்டுமே. 


இது இல்லாமல்  தொழுகை முடித்துவிட்டு வந்து கொடுக்கும் தர்மம் வேறு அதை கணக்கிட முடியாது.


இது இல்லாமல்.... தன்னுடைய.... ஒட்டு மொத்த சொத்தையும் கணக்கிட்டு இறைவன் விதித்துள்ள 2½ % வரியையும் தர்மமாக கொடுப்பார்கள். இது தனி கணக்கு.


இதையும் கணக்கிட முடியாது.... இது இல்லாமல்... நோன்பு காலங்களில் தினமும் 30 நாளும் மறைவான தர்மங்களை முஸ்லீம்கள் கொடுப்பார்கள்.  இது தெரிய வராது சொல்லவும் மாட்டார்கள்.


பொதுவான தர்மம் என்கிற அடிப்படையில்  பொருளாக கொடுப்பது மட்டுமே... தெரிய வரும்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...

No comments

Powered by Blogger.