சவூதி வழங்கிய வீடுகள் பகிர்ந்தளிப்பு - 19 வருட இழுத்தடிப்பிற்கு முற்றுப்புள்ளி
- பாறுக் ஷிஹான் -
2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுன மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது.
குறித்த வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் தொடர்ந்தும் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாகவே இந்த வீடுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
பல அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் இந்த வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டு அதனை விரைவில் வழங்குவோம் என்று வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இன்றுவரை அவர்களால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது.
எனினும் தற்போது இந்த வீட்டுத் திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற விடுகள் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விடுகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment