Header Ads



சவூதியின் மனிதமாபிமானப் பணி தொடருகிறது, சூடானிலிருந்து இன்றும் 1866 பேர் வெளியேற்றம் (படங்கள்)



சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, 20 சவூதி பிரஜைகள், மேலும் பல சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த வெளியேற்றப்பட்ட சுமார் 1866 பேர்கள் சவூதி அரேபிய கப்பல் ஒன்றின் மூலம் இன்று சனிக்கிழமை -29- ஜித்தா நகரை வந்தடைந்தனர். 


இவர்கள் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ருவாண்டா, காம்பியா, எரித்திரியா, மலாவி, மாசிடோனியா, பிரான்ஸ், இந்தியா, நோர்வே, பாலஸ்தீனம், யமன், அமெரிக்கா, சிரியா, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, பங்களாதேஷ், ஸ்வீடன், கென்யா, துனிசியா, ஈராக், லிபியா, மொராக்கோ, ஜோர்டான், மொரிட்டானியா தான்சானியா, ஈரான், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, பனாமா, ஈகுவடோர், அயர்லாந்து, கிரீஸ், வியட்நாம், நேபாளம், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, தெற்கு சூடான், சோமாலியா, புர்கினா பாசோ, கோட் டி ஐவரி, கானா, ஜிம்பாப்வே, புருண்டி, மியான்மர், இந்தோனேசியா, தஜிகிஸ்தான் , மங்கோலியா, துருக்கி, இத்தாலி, எத்தியோப்பியா, சாட், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, உகாண்டா, லைபீரியா, நமீபியா, சியரா லியோன், ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், பெனின், நெதர்லாந்து, எகிப்து, மொரிஷியஸ், ருமேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இதில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த சில ஊழியர்களும் உள்ளடங்குவர்.


அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதில் சவூதி அரேபியா காட்டி வரும் ஆர்வத்தினையும் தூதுவர் அவர்கள்  உறுதிப்படுத்தினார். 


வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 96 நாடுகளைச் சேர்ந்த 4879 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் (139 சவூதி பிரஜைகள் மற்றும் 4738 ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).


காலித் ஹமூத் அல்கஹ்தானி

இலங்கைக் குடியரசிக்கான சவூதி அரேபிய தூதுவர்




No comments

Powered by Blogger.