Header Ads



ரயில் தடம் புரண்டதில், 17 பேர் படுகாயம் (படங்கள்)


திருகோணமலை மாவட்டம் கந்தளாய் - அக்போபுர பகுதியில் தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று (07.04.2023) பதிவாகியுள்ளது.


கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து கித்துல்உதுவ பகுதியில் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்விபத்தில் காயமடைந்த 17 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதில் மூன்று ஆண்களும், ஒரு சிறுவனும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.


விபத்து தொடர்பிலான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.