Header Ads



மறைந்திருந்த 15,000 முட்டைகள் பிடிபட்டன



மருதானை - மரியகட பகுதியில் வியாபார நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15,000-இற்கும் அதிக முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த விற்பனை நிலையம் இன்று காலை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


மறைத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை , வியாபார நிலையத்திற்கு வௌியில் வைத்து 44 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


முட்டைகளை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை  அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.