141 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பிடிபட்டது - 2 பேர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் 141 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்படுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.
யாழ்.அனலைதீவு பகுதியை சேர்ந்த 33 மற்றும் 37 வயதான இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த டிங்கி படகிலிருந்து 428 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Post a Comment