Header Ads



11 வயது பிக்குவை பலமுறை, பாலியல் வன்கொடுமை செய்த பிக்குகள் தப்பியோட்டம்


இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பயாகல கோரக்கதெனிய விகாரையின் விகாராதிபதி உட்பட மூன்று தேரர்கள் விஹாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் பயாகல கோரக்கதெனிய விகாரையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.


11 வயதான சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


2021 ஆம் ஆண்டு தொடக்கம் விஹாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களினால் அவர்களது அறைகளில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன், மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.