10 பில்லியன் டொலரை இழப்பீர்கள் என இலங்கைக்கு சுட்டிக்காட்டு
“எக்ஸ்பிரஸ் பேரள்” கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்காவிட்டால், 10 பில்லியன் (1000 கோடி) அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகையை இலங்கை இழக்க நேரிடும் என சுற்றுச்சூழல் நீதி மையம் (சி.ஈ.ஜே.) எச்சரித்துள்ளது.
இலங்கை சட்டத்தின் கீழ், சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதன் மூலம் 2023 மே 29இற்கு முன், இழப்பீடு கோருவதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சி.ஈ.ஜே. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யத் தவறினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அமைச்சரவையின் தோல்வியாக அமையும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment