10 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்
1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிருந்து விபத்து நடப்பதை பார்த்துள்ளனர்.
“விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் இருந்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த சிறுவன் கிட்டத்தட்ட 13 மாதங்களாக உயிர்காக்கும் இயந்திரத்தில் இருந்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 7 ஆம் திகதி மருத்துவர்கள் குழந்தையை உயிர் ஆதரவு அமைப்பிலிருந்து அகற்றினர் மற்றும் நோயாளியை முல்லேரியா ஆதார மருத்துவமனைக்கு மாற்றுமாறு பெற்றோரிடம் கோரப்பட்டது. மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை திங்கட்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வை.எச்.டி.சேனாரத்னவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் படி, வாகன விபத்தினால் ஏற்பட்ட கடுமையான மூளைச் சேதத்தினால் ஏற்பட்ட சிக்கல்கலே மரணத்திற்கான காரணமாகும்.
தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் அனுருத்தவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் கயான் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
Post a Comment