1000 அரச நிறுவனங்களின் அசமந்தம் - 70 கோடி ரூபாவை செலுத்தாத அவலம்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள், 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான நீர் கட்டணத்தை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிடுகிறது. பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியவை நீண்ட காலமாக நீர்க் கட்டணத்தை செலுத்த தவறிய அரச நிறுவனங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படுவது குறித்து, சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
பொதுவாக, நீர் கட்டணம் 90 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், இந்த மேலதிக கட்டணம் அறவிடப்படும். மேலும், நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால், 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அதிகாரி, இந்த தள்ளுபடியானது சகல பாவனையாளர்களுக்கும் வழங்கப்படுகின்ற ஓர் விடயமாகும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
நீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை,அதனை பல்வேறு மேலதிக செலவுகளை மேற்கொண்டு அரசாங்கம் மானியத்தையும் வழங்கி அரச நிறுவனங்களான, இராணுவம், பொலிஸ், வைத்தியசாலைகள் உற்பட அனைத்து அரச அரச சாரா நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்குகின்றன. இது முற்றிலும் ஒரு சேவையே அன்றி. வருமான நோக்கோடு மேற்கொள்ளப்படவில்லை. இதனைத் தெரிந்து கொண்டும் அரச நிறுவனங்கள் எழுபது கோடி ரூபாக்களை நிலுவையில் வைத்தால் நீர்வழங்கும் அரச நிறுவனத்தை எவ்வாறு இயக்குவது. அதன் சேவைகள் ஒரு சில மணிநேரங்களுக்கு முடங்கினால் மனிதர்களும் அரச சேவையினரும் படும் தொல்லைகளும் அசௌகரியங்களும் அனந்தம். எனவே அவர்களின் பெற்றுக் கொள்ளும் அத்தியவசிய சேவைக்கான கட்டணங்களை நிலுவையில் வைக்காமல் அவற்றை அவ்வப் போதே செலுத்தி அத்தியவசிய அரச நிறுவனங்கள் செயலிழக்காமல் பாதுகாத்துக் கொள்வது அனைவரின் கடமையாகும். அதனை சரிவர நிறைவேற்றுவது திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களின் தலையாய கடமையாகும்.
ReplyDelete