தன்னினச் சேர்க்கைக்கு ஆதரவு, விலங்குடன் உடலுறவுக்கு 10 ஆண்டுகள் சிறை - சட்டதிருத்தம் கொண்டுவந்த எம்.பி.
LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாக தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கான தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்தவினால் நேற்று -05- பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
”பெண் தன்பால் ஈர்ப்பினர், ஆண் தன்பால் ஈர்ப்பினர், இருபால் ஈர்ப்பினர், திருநர், பால் புதுமையினர் மற்றும் பிறருக்கு(+) ஆதரவாக தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இந்த சட்டமூலம் முயல்கிறது" என்று பாராளுமன்ற உறுப்பினர் டோலவத்த கூறினார்.
சட்டமியற்றும் சட்டமன்றத்தின் நோக்கம், பாலியல் நோக்குநிலையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் தண்டனைச் சட்டத்தின் விதிகளைத் திருத்துவதாகக் கருதப்பட வேண்டும்.
ஆனால் , விலங்குடன் இயற்கையின் ஒழுங்குக்கு மாறாக உடலுறவு கொள்ளும் செயற்பாடுகள் , பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
Post a Comment